பாங்காக்
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ப்ரயுத் சான் ஓச்சா கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த 9 ஆண்டுகளாக இவர் தாய்லாந்து பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். கடந்த 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது.
ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 5-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரயுத்,
”நான் கட்சித்தலைமையிலிருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு நேரமாக விலகுவதாக முடிவு செய்துள்ளேன். கட்சியைப் பிற தலைவர்களும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக்கொள்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்
என்று கூறியுள்ளார்.