தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 23 பேர் குழந்தைகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் இன்று வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு வந்தமுன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இருந்து 23 குழந்தைகள் உள்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் விரைந்து பிடிக்க தாய்லாந்து பிரதமர் ஆணை வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]