மஸ்கட்டில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

விமான நிறுவனத்தின் கேபின் குழுவினரும், விமானத்தில் இருந்த ஒரு செவிலியரும் விமானத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணம் முழுவதும் ஒரு பெண் விமான ஊழியர் குழந்தை பெற்ற தாய்க்கு உதவியாக இருந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, தாயும் குழந்தையும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel