நெட்டிசன்:
சித்தமருத்துவர் திருத்தணிசாகசலம் அவர்களது முகநூல் பதிவு:
தை ஒன்றே தமிழருக்கு உகந்த நாளாகவும்
சித்திரை ஒன்று தமிழர் விரோத நாளாகவும் சிலரால் பரப்புரை செய்யப்படுவது சரியல்ல.
உண்மையில் சொல்லப்போனால் இரண்டுமே தமிழர் புத்தாண்டே.
தமிழ்வருடபிறப்புக்காக சொல்லப்படும் ஆபாச புராண குப்பை கதைகள் இடைச்செறுகல்.
வேத காலங்களில் புதுவருடபிறப்பு என்று ஒன்று இல்லை.
தினம் மாதம் வருடம் முதன்முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்களே
உலகில் முதன்முதலில் கடற்பயணம் சென்றவர்கள் தமிழர்களே.
நிலப்பரப்பில் வாழும்வரை நாட்களை கணக்கிட தேவை ஏற்படவில்லை
கடற்பயணத்தில் செல்லும்போதுதான் நாட்களை கணக்கிடவேண்டிய அவசியம் முதலில் ஏற்பட்டது
முழுநிலவை அடிப்படையாகக்கொண்டே முதலில் மாதங்களை கணக்கிட்டார்கள்
மாதம் ஆண்டும் இவ்வாறே கணக்கிடப்பட்டது.
சித்திரை முழுநிலவு பெரியதாக இருந்ததால் அதிலிருந்து புதுவருடம் கணக்கிடும் முறை உண்டானது .
பருவ மாற்றத்தை அடிப்படையாக வைத்து தை ஒன்றை புத்தாண்டாக கணக்கிடும் முறை பின்னாளில் உண்டானது.
மாயன்கள் தென்னமெரிக்கா நாட்டில் குடியேறியதை வைத்து ஜூன் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர்
இதுவும் தமிழ் புத்தாண்டே
கம்போடியா இந்தோனீசியா லாவோஸ் நாடுகளில் மூன்று நாட்கள் சித்திரையில் புத்தாண்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது
சீனாவில் பிப்ரவரியில் ஒரு மாதம் முழுக்கவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது
ஒருமாதம் விடுமுறை விடப்படும்
புத்தாண்டு
ஆண்டு
மாதம்
வாரம்
தினம்
எல்லாமே தமிழன் உலகுக்கு தந்த கொடையே
ஆங்கில புத்தாண்டு தவிர மற்ற அனைத்து புத்தாண்டுமே தமிழன் புத்தாண்டே
ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் ஆதவன் மறைவதில்லை
சமஸ்கிருத வார்த்தையால் ஆண்டுகள் அழைத்தாலும் தமிழன் வரலாற்றில் மாற்றமில்லை
இந்த தகவலை தமிழன் என்ற கர்வத்தோடு அனைவருக்கும் பகிருங்கள்
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்