சென்னை:
ஜெயலலிதா ச சிகிச்சை பெற்றுவரும சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை: அவரை பார்த்தவர்களை நாங்கள் பார்த்தோம்! ஜெயலலிதா நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று தா.பாண்டியன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இருந்த முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ஆரம்பக காலத்தில் எந்த சிகிச்சைக்காக வந்தாரோ அதிலிருந்து ஜெயலலிதா முன்னேற்றம் அடைந்திருக்கிறார். தொடக்கத்தில் கூறப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஜெயலலிதா ஆரோக்கிய நிலையை எட்டிவிட்டார். ஆனாலும், அவர் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். அவர் இன்னும் சில நாட்களுக்கு தங்களது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று தா.பா. தெரிவித்தார்.
அவரிடம், “ஜெயலலிதாவை பார்த்தீர்களா” என்று கேட்டதற்கு, “அவரை பார்க்கவில்லை. அவை பார்த்தவர்களை நாங்கள் பார்த்தோம். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். ஆகவே அவர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel