சென்னை,
தமிழகம் முழுவதும் 6000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தகுதி தேர்வு இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த மாதம் நடைபெற இருக்கும் தேர்வில் மனப்பாட கேள்விகள் இருக்காது என்றும், சுயமாக சிந்தித்து பதில் அளிக்கக்கூடிய கேள்விளே அதிக அளவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விடைத்தாள் திருத்துவதிலும் பல கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 29ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுக்கு 598 பள்ளிகளும், 30ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுக்கு 1,263 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்வு மையங்களுக்கு, செல்பேசி கொண்டு செல்ல அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்ச்சி விகிதம் குறையும் என்றும், திறமையானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.