சென்னை: ‘டெட்’ தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து தகுதித்தேர்வுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசிநாளை மார்ச் 14ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், செர்வர் பிரச்சினை காரணமாக விண்ணப்பிப்பதில் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் டெட் தேர்வுக்கான காணக்கெடு நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel