டெஸ்லா என்ற பிரபல நிறுவனம் தான் தயாரிக்கும் காரின் மென்பொருளை ஹேக் செய்தால் ரூ.7 கோடி பரிசு அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டெஸ்லா காரின் முதல் தவறை கண்டுப்பிடிக்கும் பொறியாளருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tesla

உலகின் அதிநவீன எலக்ட்ரிக் கார்-ஆக டெஸ்லா உள்ள்து. இந்த வகை கார் 2003ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. எரிபொருள் இல்லாமல் முறிலும் மின்சாரத்திலேயே இயங்கும் டெஸ்லா கார் உலகளவில் அதிக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, செல்வந்தர்கள் மத்தியிலும் டெஸ்லா காருக்கு அதிக மவுசு உண்டு.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் ஆண்டுதோறும் Pwn2Own என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களில் குறைகளை கண்டுப்பிடிக்கும் மென்பொருள் ஆய்வாளர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இதையடுத்து தனது குறைகளை அறிந்த டெஸ்லா நிறுவனம் அதனை சரிசெய்து தனது காரின் தரத்தை உயர்த்திக் கொள்ளும்.

அந்த வகையில் டெஸ்லா தனது காரின் மென்பொருளை இந்த ஆண்டும் மேம்படுத்தி உள்ளது. இதில் உள்ள குறைகளை ஹேக் செய்து கண்டறியும் நபருக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி முதல் பக்(குறைபாடு) கண்டறியும் பொறியாளருக்கு ஒருகாரும் பரிசாக அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களையும், 2014ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களையும் ஹேக் செய்த நபர்களை பாராட்டி டெஸ்லா நிறுவனம் பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.