ஸ்ரீநகர்,

காஷ்மீர் போலீசார் ஒருவர் நான்கு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஹிஸ்புல முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.

இது காஷ்மீர் போலீசாரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் புத்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் இருந்து நான்கு  INSAS  ரக துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு   கான்ஸ்டபிள் ஒருவர்  ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளார்.

சையத் நவீத் முஷ்தக் என்ற கான்ஸ்டபிள் கடந்த சனிக்கிழமை சண்டோராவில் உள்ள சி.டி.ஆர்.ஏ. முகாமில் இருந்த,  காவல்துறைக்கு சொந்தமான  நான்கு INSAS  துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக பொலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியுடன் தப்பி ஓடிய கான்ஸ்டபிள் சையத் நவீத்,  ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும்,  ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு புல்வாமா மாவட்டத்தில் வசிக்கும்  கான்ஸ்டபிள் நஷீர் அகமத் பண்டிட் என்பவர் இரண்டு

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி அன்று,  கான்ஸ்டபிள் நசீர் அஹ்மத் பண்டிட் என்பவர்  இரண்டு ஏ.கே ரக துப்பாக்கிகளுடன் தப்பியதாகவும், பின்னர்,  அவர்  ஏப்ரல் 2016 ல் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற ஒருதுப்பாக்கி சூட்டின்போது கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.