நிலக்கரி சுரங்க முறைகேடு: குப்தா உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்!

Must read

டில்லி,

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு காரணமாக முன்னாள் நிலக்கரித்துறை அரசு செயலாளர்  எச்.சி. குப்தா உட்பட 3 அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது டில்லி சிபிஐ சிறப்பு நீதி மன்றம்.

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட், தீர்ப்பளித்தது.

இந்நிலையில் அவர்களின்  தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலக்கரி துறை முன்னாள் செயலர், எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றவாளி என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் கடந்த 19ந்தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில் குற்றவாளிகள்  என அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது (2004 -2009), சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது, நிலக்கரி துறை செயலராக பதவி வகித்தவர், எச்.சி.குப்தா. சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான குழுவின் தலைவராக இருந்த அவர், 40 சுரங்கங்கள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கினார்.

இதில், மத்திய பிரதேச மாநிலம், ருத்ரபுரி பகுதி யில் உள்ள சுரங்கத்தை, கே.எஸ்.எஸ். பி.எல்., நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், முறை கேடு நடந்ததாகவும், அதில், குப்தா உள்ளிட் டோருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

ஏல நடை முறையில் வெளிப்படை தன்மையை கடை பிடிக்கவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கு, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலக்கரி ஊழல் வழக்கில் வந்துள்ள முதல் அதிரடி தீர்ப்பு  இது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article