ஜோ பிடனை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி

Must read

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிர்ம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இன்று ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று 19 வயதான அலெக்சாண்டர் ஹிலல் டிரெய்ஸ்மேன்  என்னும் இளைஞர் மீது இவ்வாறு காவல்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

அவர் ஒரு வேன் நிறையத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் பிடிபட்டுள்ளார்.

அவர் அமெரிக்காவில் இவற்றைக் கொண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் டெமாக்ரடிக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article