நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் Thirugnanam Mylapore Perumal முகநூல் பதிவு

கலவரம் வெடித்து,
இந்தியாவே
ரத்தத்தில் மிதக்கும்
Messenger
அபாயம்
வந்துகொண்டே
இருக்கு !

சமூக வலைத்தளங்கள்
வழியாக,
நாட்டில் ஒடுக்க முடியாத
கலவரம் வெடிக்கும்
அபாயம் !


கோவை
ஜாகிர் ஹுசைனும்
10 ரூபாய்
நாணய விவகாரமும்
சொல்லும்
அபாயகரமான
சேதி !

மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு, 2017 டிசம்பரில்
ஒரு நாள்,
Reserve Bank வெளியிட்ட
ரூ. 10 நாணயம்
செல்லாது என்று,
நாடுமுழுவதும்
தீயாய் பொய்ச் செய்தி
ஒன்று ரெக்கை கட்டிப் பரவியது !

யாரோ ஒரு
விஷமி,
தேசவிரோதி,
லடாக் ஓரத்திலிருந்து,
இந்தச் செய்தியை
Whatsapp அல்லது
Messengerல்
திட்டமிட்டு
போட்டுவிட்டான் !

அவ்வளவுதான்…
இந்தச் செய்தி,
காட்டுத் தீயாக
சட்டென்று,
நாடு முழுவதும்
பரவி…
சென்னை
காட்டுப்பாக்கம்
Share Auto
டிரைவர் வரை
வந்துவிட்டது !
நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் !

இது நிஜமா என்று
அறிய, RBI ல்
பணியாற்றி
ஓய்வுபெற்ற
எனது நண்பர்
Mathivanan Nayagam
அவர்களை
தொடர்புகொண்டு
விவரம் கேட்டேன் !
“சார், அது புரளி” என்றார் !

அடுத்த ஒரு மாதத்தில்,
2017 மத்தியில்,
Reserve வங்கியே
“10 ரூபாய் நாணயம்
செல்லும். புரளியை
நம்பவேண்டாம்” என்று
அறிவித்தது !
But No Use !

இப்போது,
2020 ஜனவரியில் – RBI, “10 ரூபாய்
நாணயத்தை
வாங்க மறுத்தால்,
தண்டனை”
என்று
அறிவித்துள்ளது !

இதில் ஒளிந்திருக்கும்
ஒரு பேரபாயம்
எனக்குத் தெரிகிறது !

யாரோ ஒரு தேச விரோதி, திட்டமிட்டு
ஒரு பொய்ச் செய்தியை
சமூக ஊடகங்கள்
வழியாகப் பரப்பி,
இந்திய
ரிசர்வ் வங்கியையே
திணற வைத்து,
முன்னோட்டம் பார்த்து,
வெற்றி
பெற்றுவிட்டான் !

அடுத்த கட்டமாக,
அடக்கவொன்னா
கலவரத்தை
உருவாக்கும் ஒரு
கெட்டச் செய்தியை
Whatsappல் தட்டிவிட்டு,
‘கெக்கெக்கே’
செய்வான் !


இது பற்றி
அச்சம் தெரிவித்து,
2 ஆண்டுகளுக்கு முன்,
முகநூலில் பதிவு செய்தேன் !
Follow செய்தேன் !

“ஒரு நாலு வரி செய்தி,
நாட்டையே ரணகளம்
ஆக்கும் வாய்ப்பு
இருக்கிறது” என்று,
RBI வெளியிட்ட
10 ரூபாய் நாணநயத்திற்கு
நேர்ந்துள்ள
கொடுமையே சான்று !

எனவே,
Facebook,
Twiter,
Messenger
போன்ற
சமூக
வலைத்தளங்களை,
தீவிர
கட்டுப்பாட்டுக்குள்
வைக்க வேண்டும் !
இல்லையேல்,
இந்தியா ஒரு நாள்,
காரணமே இல்லாமல்,
ரத்தத்தில் மிதக்கும் !
பொய் செய்தியை நம்பி,
மக்கள் வெட்டிச்
சாவார்கள் !

சென்னை
உயர் நீதிமன்ற
நீதிபதி
என். சேஷசாயி முன்,
நேற்று ஒரு வழக்கு
வந்தது !
[ இணைப்பை படிக்கவும் ]

அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி,
கோவையில்,
உலகம் முழுவதும்
பயன்பாட்டில் உள்ள
சூரிய மின்சக்தி
திட்டத்தை
துவக்கிவைத்தார் !
இதனையடுத்து,
கோவையை சேர்ந்த
ஜாகிர்ஹுசைன் என்பவர்,
“சூரிய மின்சக்தி
திட்டத்தால்,
மக்களுக்கு
விதவிதமான
நோய்கள் பரவும்”
என்று, Facebook
மற்றும் Whatsappல்
கெட்ட நோக்கத்தோடு
பரப்பினார் !

போலீசுக்கு
புகார் சென்று,
ஜாகிர் ஹுசைன்
10 1 20020ல் கைது செய்யப்பட்டார் !
கைது ஆன ஜாகிர்,
ஜாமின் கேட்டு,
ஹைகோர்ட்டுக்கு
சென்றார் !

நீதிபதி என்.சேஷசாயி,
“சமூக வலைத்தளங்களில்
பொய்யான
தகவலை பரப்புவது,
மிகப்பெரிய மாசு” என்று,
கவலை தெரிவித்து,
நிபந்தனயோடு
ஜாமின் மறுத்துள்ளார் !

“10 ரூபாய் நாணயம்
செல்லாது” என்ற
புரளியால்
நாடு திணறிக்கொண்டு
இருக்கும்போதே…
இப்போது,
“சூரிய மின்சக்தி,
மனிதர்களின் உடலில்
விதவித நோய்களை
பரப்பும்…” என்று,
புரளி கிளப்பியுள்ளார்,
கோவை
ஜாகிர் ஹுசைன் !

பேச்சு மற்றும்
கருத்துரிமை
என்ற பேரால்,
சமூக வலைத்தளங்களில்
கொடூரங்கள் நடப்பது,
நிரூபணம்
ஆகிவிட்டது !

என்ன
செய்யப்போகிறது ,
இந்திய அரசு ?