ஸ்ரீநகர்:
பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீண்டும் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.மத்தியஅரசின் இந்த அதிரடி முடிவுக்கு பாகிஸ்தான் ஆதரவாளர்களை தவிர, அனைத்து இந்தியர்க ளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றிய நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர், ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விஜயம் செய்து அங்கு சில நாட்கள் தங்கியிருந்து மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக நேரடி களஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், மீண்டும் தற்போது அங்கு விஜயம் செய்துள்ளார். அங்கு பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை சமீபத்தில் தகவல் வெளியிட்டது.
இந்த நிலையில், அஜித் தோவல் காஷ்மீருக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.