நெல்லை: நாங்குநேரியில் 9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை ஏற்படுத்திஉ உள்ளது.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் கஞ்சா போதையில் நடந்ததா? அல்லது சாதிய மோதலா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். பின்னர், நாங்குநேரி பெரும்பத்து பகுதியை வந்தடைந்த அவர்கள், அங்குள்ள தேநீர் கடையில் பெட்ரோல் குண்டை வீசியதாக தெரிகிறது. இதனால் அங்கு கூடியிருந்தவர்களை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான், செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளி ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, சசிகுமார், கணேசன் உள்ளிட்ட 6 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற நெல்லை சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். 9 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.