காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பைசரன் பள்ளத்தாக்கில் செவ்வாயன்று சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள ராணுவம் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாத முகாம்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

மேலும், சுமார் 130 தீவிரவாதிகள் காஷ்மீர் முழுவதும் ஊடுருவியிருப்பதாகவும் இவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.