காட்பாடி

சென்னையில் இருந்து காட்பாடிக்கு வந்த ஆலப்புழா ரயிலில் ஒர் வாலிபர் பிணம் தொங்கியபடி இருந்ததால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளார்

ஒவ்வொரு நாளும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு சுமார் 11.15 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை அடையும் அங்கு ஏராளமான பயணிகள் ஏறுவது வழக்க்மாகும்.

அவ்வகையில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரெயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று தொங்கியப்டி இருந்தது.

ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ரயில் எஞ்சின் ஓட்டுநர் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கி ரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.  தகவல் அறிந்த ரயில்வே காவல்துறைய்னர், சம்பவ இடத்திற்கு வந்து ரெயில் என்ஜினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர்.

அந்த வாலிபர் உடலில் இரண்டு கால்களும் துண்டாகி ரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும், தலையின் பின் பகுதி சிதைந்தும் இருந்தது. வாலிபரின் கால்கள் எங்கு கிடக்கிறது என்பது தெரியவில்லை. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.