தஞ்சாவூர்,

ஞ்சாவூர் அருகே உள்ள கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து தீ பற்றி எரிந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை பகுதிகிளலம  ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

போலீசாரின் கண்மூடித்தனமான தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓஎன்ஜிசிக்கு எதிராகவும் சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என கருதி, முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடபட்டுள்ளனர்.

கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மட்டுமே ஆய்வு செய்ய வந்ததால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கதிராமங்கலத்துக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் திரளக்கூடும் என கருதி, மெரின கடற்கரை பகுதிகளில் 200க்கும் மேற்பட்டட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.