வாஷிங்டன்:
பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக, ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமூகவலைதள நிறுவனத்தின் துணை இயக்குனருடன் செரீனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் என்ற இந்த அறிவிப்பை செரீனா ஒரு கவிதை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒஹானியனும் தானும் முதலில் சந்தித்து கொண்ட ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகவும், தான் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் செரீனா தெரிவித்தார்.
செரீனாவின் கவிதை……
நான் வீட்டிற்கு வந்தேன்
ஒரு சிறு தாமதம்
யாரோ ஒருவர் எனக்காக ஒரு பயண பை தயாராக வைத்திருந்தார்
வாகனமும் காத்திருந்தது
சேரும் இடம்: ரோம்
என்னை எனது சொந்த பகுதிக்கு அழைத்து செல்வதற்காக அது இருந்தது
பின்னர் எங்களது நட்சத்திரங்கள் மோதிக் கொண்ட இடம் வந்தது
இப்போது அது முழு வட்டமாக இருக்கிறது
அதே டேபிள்..நாங்கள் முதல் முறை எதேர்ச்சையாக சந்தித்த இடம்
ஆனால் இந்த முறை இது எதேர்ச்சையானது அல்ல
ஆனால், விருப்பத்தின் அடிப்படையில்
ஒரு கால் மண்டியிட்ட நிலையில்
அந்த 4 வார்த்களை அவர் சொன்னார்!
இந்த ஆண்டு தனது 7வது விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தையும், 22-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைத்த செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளார்.