கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க்கரின் பயிற்சியாளர் ராம்காந்த் ஆச்ரேக்கர் இன்று மாலை காலமானார். மறைந்த ராம்காந்திற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என பலவாறு ரசிகர்களால் புழப்படும் சச்சின் டெண்டுல்க்கர் சர்வதேச போட்டியில் அதிக ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளர். அதுமட்டுமின்றி, சதத்திற்கே சதம் அடித்து அசத்திய வீரர் என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரர்.
இந்நிலையில் சிறப்பான பேட்ஸ்மேனாக சச்சின் உருவாவதற்கு காரணமாக இருந்த அவரின் பயிற்சியாளர் ராம்காந்த் ஆச்ரேக்கர் புதன்கிழமை மாலை காலமானார். 87வயதுடைய ஆச்ரேக்கார் விளையாட்டு உலகில் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோனாச்சாரியா விருதை 1990ஆண்டும், 2010ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். அதுமட்டுமின்றி, வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
இவரின் பயிற்சி குறித்து சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் பலமுறை குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் பயணத்தின் விடைப்பெறும் கடைசி தருணத்தில் கூட தனது பயிற்சியாளரை நினைவுக் கூர்ந்த சச்சின் ஆச்ரேக்கருக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ராம்காந்த் ஆச்ரேக்கருக்கு கிரிக்கெர் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.