சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதற்கான டெண்டர் 6 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்த மதுரை மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டு வரும் என  சிஎம்ஆர்எல் இயக்குநர் டி.அர்ச்சுணன் தெரிவித்தார்.

மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எ.பி. கோபிநாத் கேள்விக்கு  கேள்விக்கு மத்திய அரசு  சமீபத்தில் பதில் கூறிய நிலையில், மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான மத்தியஅரசின் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. இதனால், விரைவில் இரு நகர மெட்ரோ ரயில் சேவைகளுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தலைமையிலான  சிறப்பு குழுவினர், மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ள பகுதிகளில்,   ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, மெட்ரோ பாதை அமைக்க சிக்கல்கள்  நிறைந்த பகுதி என கருதப்படும், மதுரை ரயில் நிலைய பகுதியில் தொடங்கி ஆண்டாள்புரம் வரை  ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  . மதுரை ரயில்வே ஜங்ஷனில் ராமேஸ்வரம் ரயில் பாதைக்கு கீழே மெட்ரோ சுரங்கப்பாதை செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அதற்காக, 10 மீட்டர் நிலத்தடி அனுமதி தேவை. அதை ரயில்வே நிர்வாகத்திடம் கேட் உள்ளதாக தெரிவித்தவர், அதுபோல,  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள நிலத்தடிப் பகுதியில் மெட்ரோ சுரங்கப்பணிகள் தொடங்குபோது, அருகிலுள்ள கட்டமைப்புகளை பாதிக்காது, சுமூகமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம் என்றார்.

மேலும்,   இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, இது மக்களின்  போக்குவரத்தை எளிதாக்கும் என்பதுடன், மாவட்டத்தில்  வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்.

இந்த ரெயில் திட்டத்தால்,  மதுரையின் முக்கிய பகுதிகளான  திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை போன்ற பகுதிகளை முதலீட்டு மையங்களாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், வைகை ஆற்றின் கீழே மெட்ரோ ரயில் செல்வதற்கான சுரங்க பாதை அமைக்கப்படும் என்றவர், அந்த வழியாக ரயிலில் பயணம் செய்வது பயணிகளுக்கு வியப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கு மத்தியஅரசின் ஒப்புதல் கிடைத்தவுடன்,   6 மாதங்களுக்குள் டெண்டர்  அழைக்கப்பட்டு,  அடுத்த மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் சிஎம்ஆர்எல் இயக்குநர் டி.அர்ச்சுணன் தெரிவித்தார்.

மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டாக இந்த ரயில் பாதையில்,  சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில்,  மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு  மெட்ரோ அமைக்கப்பட உள்ளது.  மேலும் வைகை ஆற்றின் கீழேயும், சில இடங்களில் உயர்ட்ட பாலம் வழியாகவும்  இயக்கப்படும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்ல உள்ளது. அதாவது  ” திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.

இந்த வழித்தடத்தில்,  மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்கு வாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது.

இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும்.  இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது.

 இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும், என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து 2027ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என திமுக அரசு கூறிய நிலையில், நிதி சிக்கல்,  மற்றும் அனுமதி காரணமாக, இதுவரை முறையான அனுதி கிடைக்கவில்லை. ஆனால், ஓரிரு வாரத்தில் அனுமதி கிடைக்கும்எ ன எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்பிறகு டெண்டர் கோரப்பட்டு, 3 மூன்ற ஆண்டுகளில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.

மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி! மக்களவையில் அமைச்சர் தகவல்…

ரூ. 22,000 கோடியில் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்! மத்தியஅரசின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் மறுஆய்வு சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு