மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு பொதுமருத்துவமனையில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2 மணிக்கு திடீர்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில்  10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 7 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது..

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.