சென்னை: நாளை (நவ.29)  அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையடம ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.  வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, நாளை (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில்  அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  பெங்கல் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட இநிலையில், இந்த புயல் இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், இந்த தற்காலிக புயலானது, நாளை காலைக்கு பிறகு வலு குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

தற்காலிக புயல்: இப்படிப்பட்ட நிலையில்தான் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும். தற்காலிக புயல் என்றால் 24 மணி நேரத்திற்குள் வலிமை இழக்கும் புயல் ஆகும். அதாவது தாழ்வு மண்டலம்.. புயலாக மாறி 24 மணி நேரத்திற்குள் வலிமை இழந்து பின்னர் கரையை கடந்தால் அது தாற்காலிகப் புயல் ஆகும்.

அதன்படியே பெங்கல் புயல் தற்காலிக புயல் ஆக மாறி உள்ளது. அதன் பின் வலுக் குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான, சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆ மையம் கொண்டுள்ளது  என்றார்.

நாளை (29.11.2024) : ரெட் அலர்ட்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.

ஆரஞ்சு அலர்ட் :

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையக்கு வாய்ப்பு.

மஞ்சள் அலர்ட் :

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது….

தற்காலிக புயல் என்றால் என்ன?

பொதுவாக இந்தியாவில் ஏற்படும் புயல்களின் முக்கிய வகைகள் வெப்பமண்டல சூறாவளிகள் என்று அழைக்கப்படும். இவை அதன் வேகத்தை பொறுத்து வரையறுக்கப்படு கிறது. அதாவது காற்றழுத்த  தாழ்வு மண்டலம்.. புயலாக மாறி 24 மணி நேரத்திற்குள் வலிமை இழந்து பின்னர் கரையை கடந்தால் அது தாற்காலிகப் புயல் ஆகும்

காற்றழுத்த தாழ்வு நிலை: மணிக்கு 31 கிலோமீட்டருக்கும் குறைவான காற்றின் வேகம் (17 நாட்ஸ்) கொண்டவை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை: காற்றின் வேகம் மணிக்கு 31 முதல் 49 கிலோமீட்டர்கள் (17 முதல் 27 நாட்ஸ்) கொண்டவை.

சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 88 கிலோமீட்டர்கள் (34 முதல் 47 நாட்ஸ்) கொண்டவை.

கடுமையான சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 89 முதல் 118 கிலோமீட்டர்கள் (48 முதல் 63 நாட்ஸ்) கொண்டவை.

மிகக் கடுமையான சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 119 முதல் 221 கிலோமீட்டர்கள் (64 முதல் 119 நாட்ஸ்) ” உங்கள் ஊரில் எப்போது, எவ்வளவு மழை? பொதுமக்கள் எளிதாக அறிய தமிழக அரசு வசதி ” சூப்பர் சைக்ளோனிக் புயல் – அதி தீவிர புயல்: காற்றின் வேகம் மணிக்கு 221 கிலோமீட்டருக்கு மேல் (119 நாட்ஸ் மற்றும் அதற்கு மேல்) கொண்டவை.