சென்னை:
சாலைகளிலும், சாலையோரங்களிலும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றுவது தொடர்பாக அரசின் நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 3,168 வழிபாட்டு தலங்கள் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழிபாட்டு தலங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், வழிபாட்டு தலங்களை அகற்றுவது தொடர்பாக அரசின் நிலை என்ன என்பது குறித்த தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.