தமிழில் வெளிவந்த ‘நான் ஈ’ படத்தில் கௌரவ வேடமேற்று சுதீப்புடன் நடித்திருந்த நடிகை ஹம்சா நந்தினி.
20 க்கும் மேற்பட்ட தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் இவர் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹம்சா நந்தினி அவ்வப்போது தனது படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
கடந்த சிலமாதங்களாக எந்தவொரு பதிவும் போடாமல் இருந்த நிலையில், தலையில் முடியில்லாமல் மொட்டையடித்தது போல் உள்ள புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டார்.

அதோடு, தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் அதனால் தான் சில மாதங்களாக சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுவரை 9 முறை ஹீமோதெரபி மேற்கொண்டேன் இன்னும் 7 முறை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. இதற்காக தான் மனம் தளரப்போவதில்லை” என்றும் பதிவிட்டுள்ள ஹம்சா நந்தினி தனது ரசிகர்களை வருத்தப்பட வைத்திருக்கிறார்.
[youtube-feed feed=1]