சென்னை
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்களின் அமைதிப் புரட்சி நடந்து வருகிறது.

இளைஞர்களின் இத்தகைய அஹிம்சை போராட்டம் நாட்டு மக்களை மட்டுமின்றி உலகளாவிய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் உணர்வு ஜல்லிக்கட்டு. தைரியத்துக்கும், அச்சமின்மைக்கும் எடுத்துக்காட்டு. அவர்களது உண்மையான நம்பிக்கைக்காக தமிழர்களின் ஒற்றுமையை பார்க்க பெருமையாக உள்ளது.
தமிழக மாணவர்கள் தங்களது வேர்களுக்காகவும், கலாச்சாரத்திற்கு போராடுகின்றனர். அவர்களது குரலுக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழர்களின் உணர்வுக்கு ஆதரவளிக்கிறேன் என மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]