டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
வரும் 17ம் தேதி முடியும் இந்த ஊரடங்கை எவ்வாறு தளர்த்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், மே 17க்கு பின் என்ன வகையான தி்ட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார் என்றார்.
Patrikai.com official YouTube Channel