சென்னை

தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவியாகத் தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

நேற்று நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி அன்று இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுகின்றன.

 

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வருமான வரித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

”நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்தியேகமாகச் செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களைத் தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைப்பேசி எண் / மின்னஞ்சல்/ புலனம் (whatsapp) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தகவலைப் பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

கட்டணம் இல்லா தொலைப்பேசி எண் – 1800 425 6669,

மின்னஞ்சல் : tn.electioncomplaints2024@incometax.gov.in

வாட்ஸ்ஆப் – 94453 94453 “

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.