தராபாத்

கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்துவது பற்றி இன்று அமைச்சரவை கூட்டம் கூடி விவாதிக்க உள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று 4,826 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 5,02,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 2771 பேர் உயிர் இழந்து 4,36,619 பேர் குணம் அடைந்துள்ளனர்.   தற்போது 62,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தெலுங்கானா மாநிலத்தில் பொது முடக்கம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.   அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ”மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர பொது முடக்கம் அமல் படுத்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதற்காக இன்று அமைச்சரவை கூட்டம் கூடி இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் பொது முடக்கம் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் விவாதம் நடைபெற உள்ளது.  அதன் பிறகு தேவையான முடிவுகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.