டெல்லி

தெலுங்கானா முதல்வர் தொகுதி மறுசீரமப்பு விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி அதில், 2026-ம் ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நேற்று டெல்லியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான தி.மு.க. குழுவினர், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பேசினர். அதற்கு பின்னர்,ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்

அப்போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். கொள்கையின்படி, கூட்டத்தில் பங்கேற்க ஒப்பு கொள்கிறேன் ”

தொகுதி மறுசீரமைப்பை எந்த நிலையிலும் எங்களால் ஏற்க முடியாது தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக பா.ஜ.க. சதி செய்கிறது,. பா.ஜ.க. பழிவாங்கும் அரசியலை செய்கிறது. தென்னிந்தியாவில், அக்கட்சியே இல்லை என்ற சூழலில், தென்னிந்தியாவுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பின் வழியே பழிவாங்கலில் ஈடுபட விரும்புகிறது

எனத் தெரிவித்துள்ளார்.