பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது மற்றொரு பிரபல இயக்குனர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்.
ஜெயம், நேனு ராஜு நேனு மந்திரி, நுவ்வு நேனு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி தேஜா தற்போது கொரோனா தொற்றுகுள்ளாகி இருக்கிறார். இவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார். இவரது குடும்பத்தினருக்கு தொற்று இல்லை.
கொரோனா தொற்றுக்கு சமீபகாலமாக பிரபலங்கள் உள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் தமிழ் நடிகர் விஷால், அவரது தந்தை ஜி.கே. ரெட்டி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன், மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றுக் குள்ளாகினர். இதில் அபிஷேக் தவிர மற்ற குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.