ஐதராபாத்:

ஐ.டி நிறுவனத்தில் பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையில் முதன் முறையாக அரசு தலையிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் கோக்நிசன்ட் என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய சிலரிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பலருக்கு பணி நீக்க உத்தரவு வழங்கவும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தெலங்கானா அரசின் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சந்திரா சேகராம் இது தொடர்பாக கோக்நிசன்ட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இப்பிரச்னை தொடர்பான கூட்டு கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேகர்ராம் கூறுகையில்,‘‘ ஒரு தரப்பின் கருத்தை மட்டும் கேட்டுவிட்டு உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது’’ என்று கூறினார். அதிக வேலைவாய்ப்பை அளிக்க கூடிய ஐடி துறையை உடனடியாக பதிலளி க்குமாறு தொழிலாளர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து கோக்நிசன்ட் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘பணி நீக்க நடவடிக்கையை கோக்நிசன்ட் வாடிக்கையாக மேற்கொள்வது கிடையாது. பணியாளரின் திறன், செயல்பாடு ஆகியவை கண க்கில் எடுத்துக் கொண்டு மறுஆய்வு செய்யப்படும். சரியான பணியளர்களை கொண்டு வாடி க்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கையின் தீர்வாக சில மாற்றங்கள் ஏற்படும். இதில் சில பணியாளர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகும். பணியாளரின் செயல்பாடு அடிப்படையிலேயே எந்த நடவடிக்கையாக இருந்தாலும் எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பல்வேறு வளாக நேர்கானல் மூலம் ஆயிரகணக்கானோர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

ஐடி தொழிலாளர் கூட்டம¬ப்பு (ஐடிஇஃஎப்) இந்த பணி நீக்கத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் பணியில ஈடுபட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சார்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் நீதிமன்றம் செல்ல இந்த கூட்டமைப்பு உதவியுள்ளது. இது தொடர்பாக தெலங்கானா, மேற்குவங்க தொழிலாளர் நலத் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள இக்கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.