அலகாபாத்:

அசைவம் சாப்பிடுவோரது உரிமையை உ.பி. அரசு பறிக்க கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூடியது தொடர்பாக 27 மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘ அசைவம் சாப்பிடும் தனி நபர் உரிமையை அரசு பறிக்க கூடாது. இறைச்சி கூடங்களுக்கு புதிதாக உரிமம் வழங்கவும், பழைய உரிமங்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலாவதியான உரிமங்களை புதுப்பிக்க விரும்புவோர் உணவு பாதுகாப்பு துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இந்த பிரச்னைக்கு மாநில அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்’’ என தெரிவித்தனர்.