ஐதராபாத்: தெலுங்கானாவில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறக்க அம்மாநிலஅரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு ஐதராபாத் உயர்நீதிமன்றத் அதிரடியாக தடை வித்துள்ளது.
கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதால், பல மாநிலங்கள் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது அதன்படி செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழகம், தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஆனால், கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதால், பள்ளிகளை திறக்க மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,, தெலுங்கானா மாநிலத்தில் நாளை (செப்., 1) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு வர பெற்றோரிகளிடம் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் உடல்நலப் பொறுப்பை ஏற்காது என்று குறிப்பிடப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தடை விதிக்கக்கோரி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அது மனுதாரர் மற்றும் அரசு தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், தெலுங்கானா மாநில அரசின் பள்ளி திறப்பு அறிவிப்பிற்கு தடை விதித்து, வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.