காக்கிநாடா:
ஆந்திராவில் பஸ் கால்வாயில் விழுந்து கவிந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கசள் தெரிவிக்கிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள கால்வியில் விழுந்து கவிழ்ந்த்து.

விபத்தில் சிக்கிய தனியார் பஸ் ஹைதராபத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு சென்று கொண்டிருந்தபோது நாயக்கன்கூடா என்ற ஊர் அருகே உள்ள பாலம் ஒன்றை கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கால்வாயில் தலைகுப்பர கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 15 பேரும் கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel