சென்னை: தெலுங்கானா மாநில எம்எல்ஏ கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகராவ் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் லாஸ்யா நந்திதா (வயது 37). இவர் கார் விபத்தில் உயிரிழந்தார். இநத்விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா கண்டோண்ட்மெண்ட் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லஷ்ய நந்திதா. இவர் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது ஐதராபாத் சுல்தான்பூர் அருகே அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எம்.எல்.ஏ. லஷ்ய நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1986ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த லாஸ்யா நந்திதா, பத்தாண்டுகளுக்கு முன்பு அரசியலில் கால் பதித்தார். தெலுங்கானா அரசியலில் ஒரு முக்கிய பெண் நபரான லாஸ்யா நந்திதா, இதற்கு முன்பு 2016 முதல் காவடிகுடாவில் கார்ப்பரேட்டராக பணியாற்றினார். 2023 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு காவடிகுடா வார்டில் கார்ப்பரேட்டராக பணியாற்றினார். கடந்த ஆண்டு அவரது தந்தை ஜி சயன்னா இறந்த பிறகு, அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு லாஸ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 2023 தேர்தலில், கட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்ட பின்னர் அவர் வெற்றியைப் பெற்றார்.
அவரது மறைவுக்கு மூத்த பிஆர்எஸ் தலைவர் கேடி ராமராவ், இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.