மும்பை:

ஜான் ஏறினால் முழம் சருக்கும் என்பார்கள். அது நம் நாட்டிற்கு அதிகம் பொருந்தும். பொது இடங்களில் வசதிகள் குறைவாக இருந்தால் ஆளாளுக்கு புகார் அளிப்பார்கள். ஆனால் அதே வசதி கிடைத்துவிட்டால் அதற்கு உரிய மரியாதை வழங்கப்படுவது கிடையாது. இந்த கதை தான் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்துள்ளது.

முதல் நாளில் மும்பையில் இருந்து கோவா சென்று வந்த இந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் 337 ஹெட்போன்களை திருடிச் சென்றுவிட்டனர். அதோடு ஒவ்வொரு சீட்களிலும் பொருத்தப்பட்டிருந்த டிவி மானிட்டர்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த அநாகரீக செயலால் ஒட்டுமொத்த ரெயில் பயணிகளுக்கும் தலைகுணிவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 4 டிரிப்களில் இத்தகைய செயல்கள் நடந்துள்ளது. ஒரு டிரிப்புக்கு 84 ஹெட்போன்கள் திருடுபோயுள்ளது.
ஒரு ஹெட்போனின் மதிப்பு ரூ. 200 ஆகும்.

இதனால் ஐஆர்சிடிசி 5வது டிரிப்பில் இருந்து ரூ. 30 என்ற குறைந்த மதிப்புள்ள ஹெட்போன்களை பயணிகளுக்கு வழங்கியது. இது குறித்து ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எத்தனை ஹெட்போன்கள் திருடு போனது என்பது சரியாக கணக்கிட முடியவில்லை.

ஆனால், புதிதாக ரூ. 30 மதிப்புள்ள ஹெட்போன்கள் ஆயிரம் வாங்கப்பட்டுள்ளது. பல பயணிகள் ஹெட்போன்களை திரும்ப கொடுக்கவில்லை. ஹெட்போன்கள் விலையும் டிக்கெட் கட்டணத்தில் சேர் க்கப்பட்டுள்ளதாக கருதி எடுத்துச் சென்றுள்ளனர்’’ என்றார்.