டெயிகோப்ளானின் என்பது எஃப்.டி.ஏ-அங்கீகாரம் பெற்ற, கிராம் பாசிடிவ் பாக்டீரியா தொற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கிளைகோபெப்டைட் ஆன்டிபயாடிக் (கார்போஹைட்ரெட்-ஆன்டிபயாடிக் இணைந்த அமைப்பு) ஆகும். இது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு எதிராக மிதமான பக்க விளைவுகளுடன் மனிதர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
கொரோனா நோயாளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும், ‘லோபினாவிர், ஹைட்ராக்சிக் ளோரோக்வின்’ உள்ளிட்ட மருந்துகளை விட, ‘டெய்க்கோபிளானின்’ மருந்து, 10 மடங்கு அதிக செயல்திறன் உடையது என டெல்லி தொழில்நுட்ப நிறுவனத்தின் குஸுமா பயாலஜிகல் சயின்ஸ் துறை ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகளில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகின் பல்வேறு முன்னணி ஆய்வாளர்களும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி ஆய்வாளர்கள் பல்வேறு மருந்துகளின் மீது நடத்திய ஆய்வில் தற்போதுள்ள மருந்துகளில் சுமார் 23 மருந்துகள் கொரோனாவிற்கு எதிரான நிவாரணத்தில் சிறப்பாக செயல்பட்டதாக அறிவித்துள்ளன. வரும் நாட்களில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அளவிற்கு சிறந்ததாக உள்ள இவற்றில், ‘டெய்க்கோபிளானின்’ மருந்து குறிப்பிடத்தக்க முனேற்றம் காட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் அசோக் படேல், எய்ம்ஸ் டாக்டர் பிரதீப் சர்மா ஆகியோர் பங்கு பெற்ற இந்த ஆய்வின் முடிவுகள், ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் பயாலஜிக்கல் மேக்ரோமாலிக்யூல்ஸ்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பேராசிரியர் அசோக் படேல் கூறியதாவது:எப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற சுமார் 23 மருந்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்பாட்டில் இருக்கும் லோபினாவிர், ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ உள்ளிட்ட முதன்மை மருந்துகளை விட, ‘டெய்க்கோபிளானின்’ மருந்து, 10 – 20 சதவீதம், அதிக செயல்திறன் உடையது என கண்டறியப்பட்டது. எனினும், இதில் விரிவான ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்று கூறினார்.