
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து ‘டெடி’ படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதன் ட்ரெய்லர் நாளை (பிப்ரவரி 22) வெளியாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]Happy to share that #Teddy will stream on @DisneyplusHSVIP from March 12! #TeddyFromMarch12 @arya_offl @sayyeshaa @immancomposer @StudioGreen2 @kegvraja @actorsathish @ssakshiagarwal @thinkmusicindia pic.twitter.com/WZW8qACdwz
— Shakti Soundar Rajan (@ShaktiRajan) February 22, 2021