டில்லி:
பயங்கரவாதிகள் மற்றும் விளையாட்டுத்தனமா செய்கைகளால் வாட்ஸ்அப் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் செய்திகளின் மூல உருவாக்கத்தினை கண்டறியும் வழிமுறையை வாட்ஸ்அப் உருவாக்கவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வாட்ஸ்அப் உலகளாவிய தலைவர் வில் காட்கார்ட்டை சந்தித்த அமைச்சர், வாட்ஸ்அப் இந்த பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரி உறுதியளித்ததாகவும் கூறினார்.
அதே சமயம் வாட்ஸ்அப் செயலி பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாத சக்திகளால் துஷ்பிர யோகம் செய்ய முயன்றால், செய்திகளை பகுப்பாய் செய்து அவற்றினை அவற்றினை நீக்குவதோ அல்லது மறைக்கவோ செய்தன் மூலம், நாட்டின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அமல்படுத்துவதற்கு அவற்றைக் கண்டறியக்கூடிய ஒரு வழிமுறை இருக்க வேண்டும், ” என்றும் சந்திப்புக்குப் பிறகு பிரசாத் கூறினார்.
-செல்வமுரளி
[youtube-feed feed=1]