காயத்தால் தொடர்ந்து விலகும் வீரர்கள் – பிரிஸ்பேனில் என்ன செய்யப்போகிறது இந்தியா?

Must read

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில், ஒட்டுமொத்த இந்திய அணியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. இந்தநிலை டெஸ்ட் தொடரில் மேலும் சிக்கலாகியுள்ளது. இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், அனுமன் விஹாரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகிய நிலையில், தற்போது பும்ராவும் விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆல்ரவுண்டர் ஜடேஜா இல்லாத நிலையில், இந்திய அணி என்ன செய்யுமோ? என்ற கேள்விக்கே பதில் கிடைக்காத நிலையில், இப்போது பும்ராவும் இல்லைய‍ென்றால் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்திய அணியின் நிலை என்னவாகும் என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேசமயம், இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

அதேசமயம், ரிஷப் பன்ட் மற்றும் அஸ்வின் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள், உடடினயாக ஆஸ்திரேலியா சென்றடைந்ததும், தொடர்ந்து காயமடைந்து வருகின்றனர்.

 

More articles

Latest article