தேனி,
ன்றாக படிக்காத  காரணமாக ஆசிரியைகள் கண்டித்தால், விடுதி மாணவிகள் 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதன் காரணமாக பெற்றோர்களும், ஆசிரியைகளும் பரிதவிப்புடன் உள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் .இங்கு மாணவிகளுக்கான ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு, விடுதியில் மாணவிகள் சிலர் திடீரென மயங்கி விழுந்தனர். இதுகுறித்து விடுதி வார்ட னுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், மயங்கி விழுந்த மாணவிகளை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில்  அந்த மாணவிகள் விஷம் குடித்தது தெரியவந்தது. விஷம் குடித்த மாணவிகள்  பிரீலிதா, பாரதி, பிரீத்தி, சுமித்ரா, சினேகா, ராதிகா, சுபாஸ்ரீ ஆகிய 7 பேரும் ஆவர்.
school-stunedent
இந்த மாணவிகள்  அனைவரும்  தேனி  பேரூராட்சிக்குட்பட்ட மகாராஜா மெட்டு என்ற  மலைகிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்த  தகவல் அறிந்ததும் அவர்களது பெற்றோர்களும் உறவினர்க ளும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள்  தங்களது குழந்தைகளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று பரிதவிப்புடன் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.
போலீசாரின் விசாரணையில்,  நன்றாக படிக்காத காரணத்தினால் ஆசிரியைகள் கண்டித்துள்ளனர்.  இதனால் மனமுடைந்த அந்த மாணவிகள் எலி மருந்து வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியைகளும் பரதவிப்புடனே உள்ளனர்.
இந்த சம்பவம்  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிகளின் தற்கொலை முயற்சி குறித்து,  ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ண வேணி தனி தாசில்தார் ராணி ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடமும், விடுதி காப்பாளரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளின் தற்கொலை முயற்சி குறித்து,  பள்ளி தலைமை ஆசிரியை காமேஸ்வரி கூறுகையில், அந்த மாணவிகளுக்கு படிப்பதில் சிரமம் இருந்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஆசிரியர்கள் யாரும் அவர்களை துன்புறுத்தவில்லை என்றார்.
ஆனால், மருத்துவர்கள், இது சாதாரண எலி மருந்துதான். ஆகவே அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆசிரியைகள், பெற்றோர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.