டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியரை பள்ளி வைத்து சரிமாரியாக குத்தி கொலை செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் நங்கோலி பகுதியில் செயல்பட்டுவரும் அரசுபள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிபவர் 45 வயதான முகேஷ் குமார். வகுப்பில் ஒழுங்கீமனாக செயல்படும் மாணவர்களை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் ஒரு தேர்வை நடத்தி முடித்துவிட்டு தனது அறைக்குச் சென்று கேள்வி-பதில் தாள்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு நுழைந்த இரு மாணவர்கள் அவரை சரமாரியாக கத்தியில் குத்தியதாகத் தெரிகிறது. ஆசிரியரை தாக்கிவிட்டு இருவதும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆசிரியர் முகேஷ் குமார் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இச்சம்பவம் டெல்லியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் முகேஷ் குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.