மும்பை

திக அளவில் பெண் ஊழியர்கள் ராஜினாமா செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

ஐடி நிறுவனங்களில் முதல் இடங்களில் உள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் அதிக அளவில் பணி புரிகின்றனர். ஆனால் டிசிஎஸ் தனது பெண் ஊழியர்களிடையே ராஜினாமா செய்வது அதன் ஆண் ஊழியர்களை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது,

இதர்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை முடிவுக்கு கொண்டு வருவது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி (CHRO), மிலிந்த் லக்காட் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ”வீட்டிலிருந்து பணி செய்வதைத் தான் அதிக அளவில் பெண்கள் விரும்புகின்றனர் எனத் தோன்றுகிறது.

இந்நிலை மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன் தற்போது தொற்று குறைந்து எல்லாம் இயல்பாக்கப்பட்ட பிறகும் முன்பு வீட்டிலிருந்து பணி புரிந்தது தற்போது அலுவலகத்திற்குத் திரும்புவதைத் தடுக்கிறது,” என்று கூறி உள்ளார்.