நொய்டாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு நைனிதால் வந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், காருக்குள் நிலக்கரி அங்கீதி (அடுப்பு) ஏற்றி வைத்துவிட்டு தூங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த மனீஷ் கந்தார் (டாக்ஸி ஓட்டுநர்) சனிக்கிழமை இரவு நைனிதால் சூக்காதால் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி, குளிர் காரணமாக காருக்குள் நிலக்கரி அங்கீதியை எரித்துவிட்டு கம்பளி போர்த்திக் கொண்டு தூங்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை அவர் எழுந்திருக்காததால், பார்க்கிங் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த மனீஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் ஏற்கனேஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
போலீசார் கூறுகையில், மனீஷின் வாயில் நுரை காணப்பட்டதாகவும், அங்கீதி புகை காரணமாக மூச்சுத்திணறி மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர். உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் உறுதியாகும் என கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]