சென்னை: மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 3 சவால்களை சுட்டிக்காட்டினார்.
முன்னதாக நேற்று (நவம்பர் 17ந்தேதி) 16-வது நிதிக் கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தனர். அதைத்தொடர்ந்து இன்று நிதிக்குழுவுடன் தமிழக முதல்வர் தலைமையில் நிதித்துறைஅதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் 16ஆவது நிதிக்குழு கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள குழுவின் தலைவர் முனைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள் திரு. அஜய் நாராயண் ஜா, திருமதி அன்னி ஜார்ஜ் மேத்யூ, முனைவர் மனோஜ் பாண்டா ஆகியோருக்கு முதலமைச்சர் சால்வை அணிவித்து, வரவேற்றார்.
இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வரி பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என நிதிக்குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இன்று (திங்கள்கிழமை) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 16-ஆவது நிதிக் குழு பரிந்துரைகள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைய வேண்டும். மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 41% ஆக மாற்றியதை வரவேற்கிறோம். ஆனால் வரி வருவாயை 33.16% மட்டுமே மத்தி அரசு பகிர்ந்து அளித்துள்ளது. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50% ஆக மத்திய அரசு உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த நிதிக்குழுவின் “சமீப ஆண்டுகளில் தமிழகம் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க 3 சவால்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் பல சூறாவளி, தொடர் மழை போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளது. சேதங்களைச் சமாளிக்க மாநில அரசுகள் நிறைய முதலீடு செய்கின்றன. இயற்கைப் பேரிடர்களின் காரணமாக, வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் போனது.
தமிழ்நாட்டில் தற்போது சராசரி வயது 36.4 ஆக உள்ளது, மாநிலத்தின் சராசரி வயது 38.5 ஆக இருக்கும் அதிக எண்ணிக்கையிலான முதியோர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள். தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறுவதற்கு முன், இதைச் செய்யத் தவறினால், முதியோர்கள் அதிகம் உள்ள மாநிலமாக மாறும் அபாயத்தை மாநிலம் எதிர்கொள்கிறது. இதை நிதி ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, நகர்ப்புற மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. நகர்ப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநிலம் சவால்களை எதிர்கொள்கிறது. குறைந்த நில வளம் மற்றும் நீர் வளம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு. நகர்ப்புற வளர்ச்சிக்கு அதிக நிதி பரிந்துரைக்கப்பட வேண்டும்…’’ என்றார்.
தற்போதைய வரிப்பகிர்வு முறை தமிழ்நாட்டின் வளர்ச்சியை தண்டிக்கும் வகையில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரிப் பகிர்வு முறையால் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலங்களைப் போல வளர்ந்து வரும் மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் வந்துள்ள இந்த 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், பரந்து விரிந்த இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறவைு செய்து , இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக, மாற்றும் வகையில் அமைந்திடும் என்று நான் நம்புகிறேன். மத்திய அரசுக்கும், பல்வேறு மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புகளை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கெனவே வரையறுத்து தந்திருக்கிறது.
அத்தகைய வழிகாட்டுதலின்படி நாம் கடைபிடித்து வரும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தமது மாநிலங்களின் உரிய தேவைகளை நிறைவேற்றுவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய பங்காற்றி வருகின்றன. எனினும் சுகாதாரம், கல்வி, சமூகநலம், மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றதுக்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள்தான் நிறைவேற்றி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆனால், அதற்கு மாறாக இந்தப் பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றத் தேவையான வருவாயைப் பெருக்குவதற்கான அதிகாரங்கள், மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன. அந்தவகையில், கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய, வரி வருவாய் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியதை உளமாறப் பாராட்டுகிறோம். எனினும் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வில், இடம்பெற்றிருக்கும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு இக்காலக்கட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கிறது. ஒருபுறம் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப்பகிர்வு குறைவதால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் மாநில அரசு செலவிடும் அதிக நிதியென இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.
எனவே, மத்திய வருவாயில் மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 சதவீதம் உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். இவ்வாறு 50 சதவீதம் பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட முடியும். எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்ச வரம்பை இந்த நிதிக்குழு பரிந்துரைத்தது. மாநில அரசுகளுக்கான 50 சதவீதம் வரிப் பகிர்வை உறுதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையேயான வரிப்பகிர்வை முறைப்படுத்துவதில், சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9வது நிதிக்குழுப் பரிந்துரைத்த 7.93 விழுக்காட்டில் இருந்து கடந்த 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.079 விழுக்காடாக தமிழகத்துக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. நாட்டுக்கு வழிகாட்டும் வகையில், பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழகத்தின் முன்னேற்றத்தை தொய்வடையச் செய்து தண்டிப்பதைப் போல தற்போதைய வரிப்பகிர்வு முறை அமைந்துள்ளது.
எனவே, சமச்சீரான வளர்ச்சியையும் திறமையான நிர்வாகத்தையும், இந்த வரிப் பகிர்வு முறையில் சம குறிக்கோள்களை கருதி இந்த நிதிக்குழு தன்னுடைய பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம். நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில், வளர்ச்சிக் குன்றிய பகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவது அவசியம் என்றாலும், அதேவேளையில் பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலமாகவே அவற்றின் வளர்ச்சியைத் தக்கவைப்பதுடன், அந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பாதைக்கும் வழிவகுக்க முடியும் என்பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதியைக் குறைத்து, வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கும் நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை. குறுகிய கால கண்ணோட்டத்தோடு செயற்கையாக உருவாக்கப்படும் நிதி, மறு பகிர்வு முறை, எதிர்காலத் திட்டங்களுக்கான பலன்களைத் தராது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறமையாக செயல்பட்டு வரும் தமிழகத்தைப் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில், நிதிப்பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும்
முந்தைய நிதிக்குழுக்களின் பரிந்துரைகளை கவனமாக ஆராய்ந்து பாரக்கும்போது, கடந்த காலங்களில் வளர்ச்சிக் குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கியபோதும், பல மாநிலங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த 45 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறை மூலம் எதிர்பாத்த அளவுக்கு வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
எனவே, 16-வது நிதிக்குழு இத்தகைய அணுகுமுறைகளை பரிசீலனை செய்து, நாட்டின் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி ஆதாரங்களை வழங்கிடும்போது, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத வகையில், தேவையான நிதியை வழங்குவதற்கான ஒரு புதிய அணுகுமுறைய வடிவமைப்பதற்கான தேவை இன்று உருவாகியிருக்கிறது. இந்நிலையில், தமிழகம் சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர்களால் தமிழகம் பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புயல்கள், மற்றும் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர் உடைமை உள்ளிட்ட வாழ்வாதார பாதிப்புகள் மற்றுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றன. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளைச் சரி செய்வதற்கு பெருமளவிலான நிதி மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப்படவேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, பேரிடர் துயர் துடைப்புப் பணி, மறு சீரமைப்பு பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்வதற்கு உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டும்.
தமிழகத்தின் தற்போதைய மக்கள் தொகையின் சராசரி 36.4 ஆண்டுகள். இது உ.பியின் சராசரி அளவைவிட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும்போது, தமிழகத்தின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். தமிழகம் இதுவரை மக்கள்தொகை அடிப்படையில் பெற்றுவந்த பயன் வேகமாக குறைந்து வருவதையும், சமூக பாதுகாப்பு தேவை அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது.
அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் 10 ஆண்டுகளில் தமிழகம் தேவையா வளர்ச்சி அடைவதுடன் பல்வேறு துறைகளில் முதலீடு உடனடியாக செய்ய வேண்டிய தேவை உள்ளது. அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில், முன்னேறிய மாநிலமாக தமிழகம் மாறுவதற்கு முன்பாக, முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இந்த மிக முக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நிதியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகளவிலான நிதி தமிழகத்துக்கு வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.என்று முதல்வர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினை 16ஆவது நிதிக்குழுவின் தலைவர் முனைவர் அரவிந்த் பனகாரியா அவர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.