சென்னை

குழந்தைகள் நலக் குழுவிடம் தவெக தலைவர் விஜய் மீத் தவாகவினர் புகார் அளித்துள்ளனர்

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசுகளை வழங்கி, கௌரவப்படுத்தி வருகிறார். அதன்[அடொ இந்தாண்டும் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பரிசுகள் வழங்கும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜய்யை கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பது அண்ணா என்று அழைத்து தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் சிவமூர்த்தி, விஜய் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில்,

“நடிகர் ஜோசப் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு, ஜூன் 28-ம் தேதி திருவான்மியூரில் நடந்த பள்ளி பொது தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், மாணவிகளை அழைத்து அவர்களை அணைப்பதும், அனுமதியின்றி தொடுவது மற்றும் முறைகேடாக நடந்தது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதை பல கோடி மக்கள் பார்த்து பெண் குழந்தைகளை தொடுவது தவறில்லை என்று கருதி தொடக்கூடும். இதனால் சமுதாயத்தில் இளைஞர்களும், மற்றவர்களும் நடிகர் ஜோசப் விஜய் செய்கையை பார்த்து அதேபோல் செய்ய முற்படுவார்கள். அதனால் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் மற்றும் காலாசார சீர்கேடு ஏற்படுவது மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது என்றால், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகபெரிய கேள்வி குறி ஆகிவிடும். ஆதலால் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]