2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது.
விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ. – SIA) நிறுவனத்துக்கு 49 சதவீத பங்குகளும் உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசு சமீபத்தில் டாடா நிறுவனத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்ததை அடுத்து எஸ்.ஐ.ஏ. நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்.ஐ.ஏ.-வுக்கு 25.1 சதவீத பங்குகளை வழங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது.
டாடா நிறுவனத்தின் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் கட்டமாக ரூ. 2,059 கோடியை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
2024 மார்ச் மாதத்திற்கு முன்பு இவ்விரு விமான சேவை நிறுவனங்களையும் இணைக்க தேவையான அரசு அனுமதி மற்றும் இதர துறைகளின் ஒப்புதலை பெற இவ்விரு நிறுவனங்களும் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்த இணைப்பை அடுத்து அனைத்து முக்கிய விமான சேவை நிறுவனங்களிலும் தனது இருப்பை உறுதி செய்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா நிறுவனத்தில் மேலும் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.