டெல்லி:
 தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாட்டா குழுமம் இறங்கி உள்ளது.  இதுவரை ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் வேறு எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டாத நிலையில், ஏர் இந்தியாவை டாட்டா குழுமம் கைப்பற்றுவது 99 சதவிகிதம் உறுதியாகி உள்ளது.

இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால், அதன் பங்குகளை விற்பனை செய்ய மத்தியஅரசு முடிவு செய்து அறிவித்தது.
அதையடுத்து,  டாடா குழுமத்தின் சேர்மன் சந்திரசேகரன் மத்திய அரசு வசம் உள்ள 51 சதவிகிதம் ஏர் இந்திய நிறுவனப்பங்குகளை பெற விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கான இறுதி ஏல தேதிக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. ஆனால், இதுவரை வேறு எந்த ஒரு நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், டாடா குழுமம் உடன் இணைந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது சிங்கப்பூர் நிறுவனம் விருப்பம் காட்டாததால், டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறது.
உலக நாடுகளின் பொருளாதாரமே கொரோனா பாதிப்பினால் கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், உலக நாடுகளின் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க எந்தவொரு விமான நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. முன்னதாக டாட்டாவுடன் இணைந்து ஏர் இந்தியாவை கைப்பற்ற நினைத்த சிங்கப்பூர் நிறுவனமும் தனது முயற்சியில் இருந்து விலகிக்கொண்டுள்ளது.
இதனால், ஏர் இந்தியா நிர்வாகத்தை கைப்பற்ற டாட்டா நிறுவனம் மட்டுமே களத்தில் உள்ளது.  ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏலத்திற்கான கடைசி தேசி ஆகஸ்டு 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.  ஏலத்திற்கான  காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசும் விரும்பவில்லை என்ற கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியாவை கைப்பற்றுவதில் டாடடா குழுமம் மும்முரம் காட்டி வருகிறது.
டாடா ஏர் லைன்ஸ்  நீண்டகாலமாக  விமானத் துறையில் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா முதல் ஏர் ஏசியா பெர்ஹாட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ஆகியவற்றுடன் முறையே ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்டாராவுக்கான மூலோபாய கூட்டு முயற்சிகளில் தொடர்ந்து பயணித்து வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே  ஏர் இந்தியா முதல் விஸ்டாரா மற்றும் ஏர் ஏசியா போன்ற விமான நிறுவனங்கள் இருந்து வரும் நிலையில், டாடா ஏர்லைன்ஸ் இந்தியாவில் வளர்ந்து வரும் விமானத் துறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
ஏற்கெனவே ரூ.24 ஆயிரம் கோடி அளவிலான பங்குகளை ஏர் இந்திய நிறுவனத்தில் கொண்டுள்ள டாடா குழுமம் மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் டாட்டா குழுமத்தினால் தொடங்கப்பட்டது. பின்னர் அது அரசின் கைக்குச் சென்றது.
இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை திரும்ப்பப்பெற்றால் மகிழ்வேன் என ரத்தன் டாடா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.