’’வாடிக்கையாளர்களிடம் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால், ’டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்’’
தமிழகத்தில் மதுபானங்களை அரசு நிறுவனமான ‘’டாஸ்மாக்’’ நிறுவனம்,, தனது ஊழியர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்திடம், விழுப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், ’’சில டாஸ்மாக் கடை ஊழியர்கள், மதுபானங்களை, நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதலாக விற்பனை செய்வது ஏன்?’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார்.
‘’கூடுதல் விலைக்கு விற்கலாம் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?’’ என்றும் அவர் வினா எழுப்பி இருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து டாஸ்மாக் நிர்வாகம் விக்னேஷுக்கு பதில் அனுப்பி உள்ளது.
‘’கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க அனுமதி அளிக்கவில்லை’’ என அந்த பதிலில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘’வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ள டாஸ்மாக் நிறுவனம்,’’ தவறு செய்யும் ஊழியர்களிடம் இருந்து இந்த அபராதம் ஜி.எஸ்.டி.வரியுடன் வசூலிக்கப்படும்’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
’’உதாரணமாக ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரிடம் 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால், அந்த ஊழியருக்கு 10 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’’ என டாஸ்மாக் நிறுவனம், தனது பதில் கடிதத்தில், குறிப்பிட்டுள்ளது.
-பா.பாரதி.