சென்னை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.

தமிழகம் எங்கும் வரும் 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு நடைபெறும் நாட்களில் அசம்பாவிதத்தைத் தவிர்க்கத் தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி டாஸ்மாக் கடைகள் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]